உலகம்

காசாவில் ஆண்டின் முதல் வாரத்தில் 74 குழந்தைகள் பலி

09/01/2025 07:41 PM

ஹமில்தோன், 09 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டின் முதல் வாரத்தில் காசா தீபகற்பத்தில் இஸ்ரேலின் தாக்குதலினால் குறைந்தது 74 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி அமைப்பு, UNICEF தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான மண்டலங்கள் என்று கருத்தப்படும் காசா நகரில், கான் யூனிஸ் மற்றும் அல்-மவாசி போன்ற பகுதிகளில் இரவு நேர தாக்குதல்களில் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.

நேற்று நடந்த தாக்குதலில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

தாக்குதல்கள், குளிர்காலம் ஆகியவற்றால் குழந்தைகள் இறப்பதோடு அங்குள்ள மக்களை துன்பத்தை எதிர்நோக்கி வருவதாக  UNICEF நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.

காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தொடர்ந்து, 10 லட்சத்திற்கும்  அதிகமான குழந்தைகள் தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

பல குடும்பங்கள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக UNICEF குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)