பித்தாஸ், 09 ஜனவரி (பெர்னாமா) - சபாவில் 45,200 ரிங்கிட் மதிப்புடைய எரிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடல்சார் காவல்துறை பிபிஎம் உதவி ஆணையர் நஸ்ரி இப்ராஹிம் கூறினார்.
கம்போங் பங்காசாவோனில் குடாட் செயலாக்க பிரிவில் ரோந்து நடத்தப்பட்டது.
சோதனை நடவடிக்கையின் போது சந்தேகிக்கப்பட்ட படகை சோதனை செய்த பின்னர் எரிபொருள்கள் நிரம்பிய பல நீல நிற கொள்கலன்களை ரோந்துக் குழு கண்டுப்பிடித்ததாக அவர் தெரிவித்தார்.
1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக நஸ்ரி இப்ராஹிம் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)