உலகம்

ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வட கொரியா தனது இராணுவத்தைப் பலப்படுத்தியுள்ளது - அமெரிக்கா

09/01/2025 05:59 PM

நியூயார்க், 09 ஜனவரி (பெர்னாமா) --   உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வட கொரியா, தனது இராணுவ பலத்தைப் பலப்படுத்தி பயனடைவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதன் வழி, அதன் அண்டை நாடுகளுக்கு எதிராகப் போரை நிகழ்த்தும் திறனையும் வட கொரியா
பெறுவதாக அமெரிக்கா எச்சரித்தது.

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி உக்ரைரேனில் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்து ரஷ்யா வட கொரியாவுடன் நெருக்கமான அரச தந்திர மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தொடங்கி உக்ரேனியப் படைகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு 12,000-க்கும் மேற்பட்ட வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் டோரதி ஷே தெரிவித்திருக்கிறார்.

''இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா தனது எல்லைக்குள் ஒரு வெளிநாட்டுப் படையை இராணுவ நடவடிக்கைக்காக அழைத்திருப்பது இதுவே முதல் முறை. ரஷ்யாவிற்கு அளித்த ஆதரவிற்குப் பதிலாக ரஷ்யா வான் பாதுகாப்பு அமைப்புகளை வட கொரியாவிற்கு வழங்கியுள்ளது'', என்று அவர் கூறினார்.

இதனால், ரஷ்ய இராணுவ உபகரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தைப் பெறுவதன் மூலம் வட கொரியா குறிப்பிடத்தக்க அளவில் பயனடைவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)