விளையாட்டு

காலிறுதிக்கு தேர்வாகிய நாட்டின் கலப்பு இரட்டையர்

09/01/2025 06:06 PM

புக்கிட் ஜாலில், 09 ஜனவரி (பெர்னாமா) --   மலேசிய பொதுப் பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு, நாட்டின் கலப்பு இரட்டையரான சென் தாங் ஜீ-தோ ஈ வெய் தேர்வாகினர்.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில், தைவான் விளையாட்டாளர்களுடன் அவர்கள் களமிறங்கினர்.

தைவானின் லு மிங் செ-ஹுங் என் ஹூவுடன் நடைபெற்ற ஆட்டம் தாங் ஜீ-ஈ வெய் ஜோடிக்கு மிக எளிதாக அமைந்தது.

21-8, 21-14 என்ற நேரடி செட்களில் தைவான் விளையாட்டாளர்களை அவர்கள் தோற்கடித்தனர்.

இவ்வாட்டத்தில் வெற்றி பெற உலகின் ஐந்தாவது தர வரிசையில் உள்ள தாங் ஜீ-ஈ வெய் ஜோடிக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப் பட்டது.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தாங் ஜீ-ஈ வெய், ஜப்பானின் ஹிரோகி மிடொரிகாவா-நட்சூ சைத்தோ  ஜோடியுடன் மோதவுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)