பொது

முன்னாள் விற்பனை அதிகாரி ஒருவருக்குக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

09/01/2025 06:16 PM

கோலாலம்பூர், 09 ஜனவரி (பெர்னாமா) --   DAESH பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட பொருள்களை வைத்திருந்த காரணத்தால் முன்னாள் விற்பனை அதிகாரி ஒருவருக்குக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

தம் மீது சுமத்தப்பட்ட இரு குற்றாட்டுகளையும் 47 வயதான சுஹைனி சர்வான் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, நீதிபதி டத்தோ முஹமட் ஜமில் ஹுசேன் அத்தண்டனையை விதித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

குற்றச்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து அத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமான பொருட்கள் அனைத்தும் தொடர் நடவடிக்கைகாக அரசு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி பிற்பகல் மணி 2.20 அளவில் ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் டைமான் ஜெயாவில் தமது மடிக்கணினியில் DAESH பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வைத்திருந்ததாக சுஹைனி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதே தேதியில், ஜோகூர், கோத்தா திங்கி, லோக் ஹெங் பாராட் பெல்டாவில் DAESH பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட ஐந்து புத்தகங்களை வைத்திருந்ததாகவும் அப்பெண்ணின் மீது குற்றச்சாட்டப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)