ஈப்போ, 09 ஜனவரி (பெர்னாமா) -- பேராக், ஈப்போவின் சில பகுதிகளில் வரும் காலங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு முழுமையான தீர்வு திட்டமிடப்பட வேண்டும்.
அவ்வாறான திட்டமிடல், வெறும் குறுகிய கால தீர்வுகளாக மட்டுமின்றி ஒவ்வோர் அம்சத்திலும் நிலையான வளர்ச்சி உட்பட பருவநிலை மாற்றத்தைப் கருத்தில் கொள்வதும் அவசியம் என்று, ஈப்போ திமூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவர்ட் லீ சுவான் ஹாவ் தெரிவித்தார்.
வெள்ளம் என்பது தவிர்க்க முடியாத இயற்கை பேரிடர் என்றாலும், அது தொடர்ந்து சூழ்வதால் இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும் என்று ஹாவர்ட் லீ கூறினார்.
மீண்டும் மீண்டும், வெள்ளம் ஏற்படும்போது மக்கள் அதிகமான இழப்புகளையும் மோசமான விளைவுகளையும் எதிர்கொள்வதால் அந்நிலையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அவர்களுக்கு அதிக அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''அப்போதுதான் நாங்கள் எம்பிஐவுடன் இணைந்து வெள்ளத்தடுப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு 180,000 ஒதுக்கீடு பெற்றோம். இதற்கு இவ்விரு மருங்கின் சாலைகளிலும் கால்வாய் கிடையாது. இப்போது அங்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதுடன், அது வெறும் கால்வாய் மட்டுமின்றி, தாழ்வான பகுதிகளில் நீர் வெளியேற்ற வழியாகவும் இருப்பதால், அங்கு நீர் தேக்கமில்லை'', என்று அவர் கூறினார்.
இன்று, ஈப்போ, கம்போங் ஶ்ரீ கிந்தா பொதுமண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)