புத்ராஜெயா, 09 ஜனவரி (பெர்னாமா) -- இலக்கவியல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் புறநகர் இளைஞர்களுக்கு, இலக்கவியல் சந்தைப்படுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த வெளிப்பாட்டை வழங்கும் இலக்கவியல் கல்வியறிவு தொடக்க முகாமை சமூக மேம்பாட்டுத் துறை, KEMAS அறிமுகப்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் புறநகர் இளைஞர்களையும் இலக்கவியல் கல்வியறிவு மிகுந்தவர்களாக உருவாக்க அது வழிவகுக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''எனவே புறநகர் இளைஞர்களுக்கு, கோடிங், இலக்கவியல் சந்தைப்படுத்துதல், இணைய பாதுகாப்பு போன்ற திறன்களை மேம்படுத்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, இலக்கவியல் கல்வியறிவு தொடக்க முகாமை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்'', என்று அவர் கூறினார்.
தொழிற்கல்வி பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் Vokasional திறன் பயிற்சி மூலம் இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
அதோடு, புறநகர் பொருளாதார கடனுதவித் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் KEMAS மேம்படுத்த வேண்டும் என்றும் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான, டாக்டர் அஹ்மாட் சாஹிட் வலியுறுத்தினார்.
இன்று, புத்ராஜெயாவில், 2025-ஆம் ஆண்டு மடானி சமூக மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)