கோலாலம்பூர், 09 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியாவிற்கு உதவ, ஒத்துழைப்பு நல்கவிருப்பதாக இந்தோனேசியா விரும்பம் தெரிவித்திருப்பது குறித்து, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்று கோலாலம்பூரில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அதனை வெளிப்படுத்தினார்.
''அவருடைய அதிகாரப்பூர்வ பயணம் இம்மாதம் 27-ஆம் தேதி. ஆனால், அவர் வருவதற்கு எண்ணம் கொண்டிருந்தார். நாங்கள் பழைய நண்பர்கள். நாங்கள் பல பிரச்சனைகள் மற்றும் ஆசியான் தலைமைத்துவத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உதவுவதற்கும் விருப்பம் குறித்து மனம் விட்டு பேச முடிந்தது,'' என்றார் அவர்.
''உள்ளடக்கம் மற்றும் நிலத்தன்மை'' என்ற கருப்பொருளுடன் கடந்த ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை மலேசியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.
ஒருமைப்பாடு மிக்க மற்றும் வளமான ஆசியானை உருவாக்குவதற்கான நாட்டின் திட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பிரபோவோ சுபியாண்டோ உடனான சந்திப்பு அமைந்ததாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)