உலகம்

2024-ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு

11/01/2025 06:15 PM

கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டை உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பூமி மிகப் பெரிய பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டதாகவும் வானிலை கண்காணிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

மேலும், 2015-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் உலகில் மிக வெப்பமான 10 ஆண்டாகவும் பதிவாகியுள்ளது.

பூமியின் வெப்பம் 1.53 டிகிரி செல்சியஸ் முதல் 1.6 டிகிரி செல்சியஸ் வரை கூடியதாக ஐரோப்பா, ஜப்பான், பிரிட்டன் ஆகியவற்றின் வானிலை ஆய்வகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பூமியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ்சுக்குள் வைத்திருந்தால் மட்டுமே இயற்கை பேரிடர்களைத் தவிர்க்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பூமியில் நீண்ட காலத்திற்கு வெப்ப நிலை நீடித்தால், தீவிர பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு இறப்பு, சேதம், உயிரினங்களின் அழிவு மற்றும் கடல் மட்ட உயர்வு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)