கெளலூன், 11 ஜனவரி (பெர்னாமா) -- ஹோங்காங் கெளலூனில் நடைபெற்ற 2025 அனைத்துலக போலிங் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற நாட்டின் முதல் மகளிர் போலிங் வீராங்கனையாக, நதாஷா முஹமட் ரோஸ்லான் மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
1972-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் அப்போட்டியின் மகளிர் தனிநபர் பிரிவில், 53 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர், தங்கம் வென்று அவர் வரலாறு படைத்துள்ளார்.
28 வயதான நதாஷா, ஜெர்மனி போட்டியாளரை 217-166, 226-169 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
சிலாங்கூரைச் சேர்ந்த அவர், குவைத்,சல்மியாவில் நடைப்பெற்ற 2023 அனைத்துலக போலிங் வெற்றியாளர் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே, 2018-ஆம் ஆண்டின் உலக வெற்றியாளரான நாட்டின் போலிங் விளையாட்டாளர் முஹமட் ரஃபிக் இம்முறை ஆடவர் பிரிவில் சீனாவிடம் தோல்வி கண்டார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற அவர், இரண்டாம் மூன்றாம் சுற்றுகளில் அதனை தற்காத்துகொள்ளத் தவறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)