பாயென், 11 ஜனவரி (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற இவ்வாண்டுக்கான முதல் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாயேன் லெவர்குசன் வெற்றி பெற்றது.
பண்டேஸ்லீகா கிண்ணத்தை தற்காக்கும் நோக்கில், இவ்வாண்டில் புதிய வியூகத்துடன் களமிறங்கிய பாயேன் லெவர்குசன். பொருஸ்சியா டோர்ட்மண்ட் அணியுடன் விளையாடியது.
ஆட்டம் தொடங்கி 25 வினாடிகளிலேயே முதல் கோலை அடித்து, டோர்ட்மண்டை, பாயேன் லெவர்குசன் திக்குமுக்காட வைத்தது.
அதன் பின்னர், எட்டாவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்து, பாயேன் லெவர்குசன், டோர்ட்மனை பின்னுக்குத் தள்ளியது.
காயமடைந்த ஆறு ஆட்டக்காரர்களுடன் விளையாடிய டோர்ட்மண்ட் வலுவிழந்து காணப்பட்டாலும், 12-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது.
முதல் பாதி ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்து கொண்டது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கிடைத்த பினால்டி வழி, டோர்ட்மண்ட் இரண்டாவது கோலை அடித்தாலும் பாயேன் லெவர்குசனின் வெற்றியை அதனால் தடுக்க இயலவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)