பொது

ஐக்கிய அரபு சிற்றரசுக்கான பயணத்திற்கு பின்னர் நீண்டகால முதலீடுகள் அதிகரிக்கலாம்

14/01/2025 05:10 PM

அபு தாபி, 14 ஜனவரி (பெர்னாமா) -- ஐக்கிய அரபு சிற்றரசு UAE-க்கான அலுவல் பயணத்தைத் தொடர்ந்து, சுகாதார பாதுகாப்பு துறை, விமான நிலைய நிர்வகிப்பு மற்றும் எரிசக்தி உட்பட நீண்ட கால முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியாவிற்கும் அபுதாபி முதலீட்டு அமலாக்கத் தரப்பு, ADIA-க்கும் இடையே உள்ள உறுதியான ஒருங்கிணைப்பு நாட்டில் நிலையான மற்றும் போட்டித் திறன் கொண்ட பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

மலேசியாவில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதில் இதர உலக முதலீட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்து ADIA வருகை புரிந்திருந்தது.

சுகாதார பாதுகாப்பு துறை, விமான நிலைய நிர்வகிப்பு மற்றும் எரிசக்தி உட்பட நீண்ட கால முதலீடுகளை அதிகரிப்பது முடியாத காரியம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)