உலகம்

காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கப் பல கோடி அமெரிக்க டாலர் தேவை - பைடன்

14/01/2025 06:54 PM

வாஷிங்டன், 14 ஜனவரி (பெர்னாமா) -- காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சீரமைக்கப் பல கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

"லாஸ் ஏஞ்சலஸை அதன் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப் பல கோடி டாலர்கள் தேவைப்படும். எனவே, இதற்கு தீர்வுக்காண காங்கிரஸ் நிதியை அதிகரிக்க வேண்டும். அதன் பின்னர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்," தமது அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் பைடன் கூறினார்.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி, காட்டுத் தீச் சம்பவங்களினால் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்நகரின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான காட்டுத்தீ சம்பவமாக இது கருதப்படுகிறது.

சுமார் 16,000 ஹேக்கர் நிலப்பரப்பு காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

12,300 கட்டிடங்கள் சேதமுற்றன.

வறண்ட வானிலையும் பலத்த காற்றும் தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)