அபு தாபி , 14 ஜனவரி (பெர்னாமா) -- மலேசிய- ஐக்கிய அரபு சிற்றரசின் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், சீபாவில் அவ்விரு நாடுகளும் இன்று கையெழுத்திட்டன.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமும், ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபரும், அபு தாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமட் பின் சைட் அல் நஹ்யானும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைப் பார்வையிட்டனர்.
மலேசியாவிற்கும் ஐக்கிய அரபு சிற்றரசிற்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளைத் திறப்பதே இந்தச் சீபா ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
ஐக்கிய அரபு சிற்றரசிற்கு மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார், முன்னதாக ஷேக் முகமட்டை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பின்னர்,ஷேக் முகமட் தலைமையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு ஏடிஎஸ்டபல்யு எனப்படும் அபு தாபி நிலைத்தன்மை வாரத்தின் தொடக்க விழாவில் பல உலகத் தலைவர்களுடன் இணைந்து பிரதமரும் கலந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)