கோலாலம்பூர் , 14 ஜனவரி (பெர்னாமா) -- நாளை தொடங்கி ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாரா மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் முயற்சியாக ரஹ்மா உதவித் தொகை, எஸ்திஆர் மற்றும் சாரா கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ஆயிரம் கோடி ரிங்கிட்டை விட ஆயிரத்து 300 கோடி ரிங்கிட்டாக 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இ-காசே பதிவில் உள்ள ஏழை மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கான நிதி, 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,200 ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டு 2,100 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதை நிதி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2025இல் ஜனவரி முதல் மார்ச் வரை மாதத்திற்கு 100 ரிங்கிட் சாரா உதவித்தொகையை மைக்காட்டின் வழி மக்கள் பெறுவதோடு ஏப்ரல் தொடங்கி அதன் விகிதம் மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
அதோடு, எஸ்திஆர் பெறும் 54 லட்சம் பேர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, சாரா கூடுதல் உதவியையும் பெறுவார்கள் என்று எம்ஒஎஃப் தெரிவித்துள்ளது.
குடும்பங்களுக்கு வழங்கப்படும் சாரா கூடுதல் உதவிதொகை ஒரு மாதத்திற்கு 100 ரிங்கிட் என்று எம்ஒஎஃப் தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)