உலகம்

கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரம்

14/01/2025 06:45 PM

ஸ்டில்ஃபோன்டைன், 14 ஜனவரி (பெர்னாமா) -- தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் அகப்பட்டுக் கொண்ட சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுரங்கத்தினுள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் இதுவரை குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோகன்னஸ்பர்க் தென்மேற்கில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் எனும் பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது.

இந்த சுரங்கத்தில் 400 முதல் 800 சுரங்க தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சுரங்கத்தில் சிக்கியுள்ள சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியைத் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் விரைவு படுத்தியுள்ளனர்.

சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் மடிந்து கிடப்பதாக, அதில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் எழுதிய கடிதம் கிடைத்த நிலையில், இந்த மீட்புப் பணி தொடங்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)