பொது

பிரதமரின் அதிகாரப்பூர்வ பிரிட்டன் பயணம் ; வியூக கூட்டாண்மை மேம்பாட்டின் விவாதம்

16/01/2025 03:42 PM

லண்டன், 16 ஜனவரி (பெர்னாமா) -- பிரிட்டனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சகாவான கீர் ஸ்டார்மரைப் புதன்கிழமை சந்தித்தார்.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு வியூக கூட்டாண்மையை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அவ்விரு தலைவர்களும் விவாதித்தனர்.

"நிச்சயமாக, பொருளாதாரத்தில் அடித்தளம் மற்றும் கவனம் செலுத்தப்படும். அதே போல் பாதுகாப்பு மற்றும் கல்வியிலும்," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

புதன்கிழமை, லண்டன், டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான ஒத்துழைப்பை உடனடியாக உருவாக்க மலேசிய அமைச்சரவையும் பிரிட்டன் அதிகாரிகளும் இணைது ஒரு குழு உருவாக்கப்படும் என்று அன்வார் விவரித்தார்.

இது மலேசியா மட்டுமல்லாமல் ஆசியானுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.

சந்திப்பின் போது ஸ்டார்மரை மலேசியாவிற்கு வருகை தருமாறும் அன்வார் அழைப்பு விடுத்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)