பொது

உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கிறது டி.என்.பி

17/01/2025 06:08 PM

லண்டன், 17 ஜனவரி (பெர்னாமா) -- பிரிட்டன், ஈஸ்ட்ஃபீல்ட் மற்றும்பங்கர்ஸ் ஹிலில் 102 மெகாவாட் கொள்ளளவு கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்திருப்பதன் வழியாக, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆர்.இ சந்தையில், மலேசியாவின் விரைவான விரிவாக்கத்தைத் தெனாகா நேஷனல் நிறுவனம், திஎன்பி ஊக்குவிக்கிறது.

அந்த மின் உற்பத்தி நிலையங்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், லண்டனில் வியாழக்கிழமை, திறந்து வைத்தார்.

நாட்டின் மின்சார உற்பத்தி நிறுவனமான திஎன்பிக்குச் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் உற்பத்தி சொத்துகளை உள்ளடக்கி 1.3 ஜிகாவாட் கொள்ளளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கொண்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து முழுவதும் தவிர்த்து, தீபகற்ப மலேசியாவில் 3.2 ஜிகாவாட் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

102 மெகாவாட் திறன் கொண்ட அவ்விரு சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், உலகம் முழுவதும் நிலையான ஆற்றல் தீர்வுகளை இயக்குவதில் மலேசியாவின் நிபுணத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

அதோடு, அவை இரண்டும் வணிக செயல்பாட்டு தேதியை இவ்வாண்டின் தொடக்கத்தில் அடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)