பாகிஸ்தான், 17 ஜனவரி (பெர்னாமா) -- அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இதுவாகும்.
அடியாலா சிறையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இன்று அத்தீர்ப்பை அறிவித்தார்.
மேலும், இம்ரான் கானுக்கு 10 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் மற்றும் புஷ்ரா பீபிக்கு 50 கோடி பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தத் தண்டனை பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே புஷ்ரா பீபி நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]