மெல்போர்ன், 18 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் வெற்றிப் பெற்றார்.
இந்த வெற்றியின் வழி மெல்போர்ன் மண்ணில் அவர் முதன் முறையாக காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ராட் லேவர் அரேனா அரங்கில் நடைபெற்ற இந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் 21 வயதுடைய கார்லோஸ் அல்கராஸ் போர்த்துகலின் நுனோ போர்ஹெசைச் சந்தித்தார்.
அதில், 6-2, 6-4, 6-7 மற்றும் 6-2 என்ற நிலையில் கார்லோஸ் அல்கராஸ் வெற்றிப் பெற்றார்.
இப்பருவத்தில் நான்கு பெரிய போட்டிகளின் கிண்ணங்களை வெல்லும் இலக்கில் இருக்கும் அல்கராஸ் அதில் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் குறிக்கோளை இந்த வெற்றியின் வழி நெருங்கியுள்ளார்.
அவரது சகநாட்டவரான ரஃபேல் நடால் 2010ஆம் ஆண்டில் தமது 24 வயதில் அச்சாதனயை செய்திருந்தார்.
நாளை நடைபெறவிருக்கும் அடுத்த சுற்றில் அவர் பிரிட்டனின் ஜாக் டிராப்பருடன் விளையாடவிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)