பொது

தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஆலோசனைகள் வழங்க கல்வி அமைச்சு தயார்

22/01/2025 06:19 PM

கோலா நெருஸ், 22 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை, சுக்கையில் உள்ள பாடாங் அஸ்தாக்கா விவசாய சந்தையில் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆடவருக்கு எந்த நேரத்திலும் ஆலோசனை சேவைகளை வழங்க மலேசிய கல்வி அமைச்சு, கே.பி.எம் தயாராக உள்ளது.

அஹ்மட் நோர் அல் ஃபைசன் ஜூசோவின் பள்ளியில் பயின்று வரும் தங்களின் 10 வயது மகனும், நான்கு வயது பிள்ளையும் நல்ல நிலையில் இருப்பது, தங்கள் தரப்பு அவரின் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டபோது தெரிய வந்ததாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.

ஒவ்வொரு பள்ளி, மாவட்டக் கல்வி அலுவலகம் ,பிபிடி மற்றும் திரெங்கானு மாநிலக் கல்வித் துறை, ஜேபிஎன்த் ஆகிய இடங்களில் ஆலோசகர்கள் இருப்பதால் கல்வி அமைச்சுக்கு அந்த உறுதிப்பாட்டை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஃபட்லினா சிடெக் கூறினார்.

சம்பந்தப்பட்ட மாணவருக்கு, மனோவியல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"நாங்கள் ஏற்கனவே ஜேபிஎன்டி மற்றும் பிபிடி மூலம் தகவல்களைப் பெற்றுள்ளோம். இந்த விவகாரத்தைக் கையாள ஆலோசகர்ளை அனுப்ப வேண்டிய அவசியம் உள்ளதாக கருதுகிறோம். குழந்தைகள் எப்படி பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, ஒரு சமூகமாக நாம் இச்சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, முழு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனெனில், இது சமூகத்திம் மிக முக்கியமானவர்களான குழந்தைகளையும் உள்ளடக்கியுள்ளது, " என்றார் அவர்.

இன்று கோலா நெருஸில் உள்ள டத்தோ ரசாலி இஸ்மாயில் வளாகத்தின் ஆசிரியர் கல்வி கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)