கோத்தா பாரு, 21 ஜனவரி (பெர்னாமா) -- திரெங்கானு, சுக்கையில் உள்ள ஒரு சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை, மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவத்தைத் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கடுமையாக சாடினார்.
அச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் போலீஸ் கைது செய்ததாக அவர் கூறினார்.
''வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கைகளை எடுக்க அமலாக்க தரப்பிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே, அவர்களிடம் தவறு இருப்பதை அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்தால், தேசிய சட்டத்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவர், '' என்றார் அவர்.
இன்று, கிளந்தான் மாநில ஊடகவியலாளர்களுடன் சந்தித்தபோது ஃபஹ்மி ஃபட்சில் அதனை கூறினார்.
கடந்த வாரம் 17ஆம் தேதி, திரெங்கானு, சுக்கையிலுள்ள படாங் அஸ்தகா சந்தையில் ஆடவர் ஒருவரைப் பலர் தாக்கிய, ஒரு நிமிடம் 52 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
47 வயதுடைய மாற்றுத்திறனாளி ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஒரு விற்பனைக் கடையில் மோதியதில் உணவு கீழே விழுந்து சிதறியதைத் தொடர்ந்து, இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)