கோத்தா திங்கி, 23 ஜனவரி (பெர்னாமா) -- இன்று காலை சுங்கை ரெங்கிட்- கோத்தா திங்கி சாலையில் 61.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி ஒன்று கவிழ்ந்தது.
இதில் 23 வயதுடைய இளைஞர் முஹ்மட் இசுடின் நோர் ஜாகி அஃபாண்டி உயிரிழந்த நிலையில் அவரது தந்தை காயமடைந்தார்.
காலை 11.30 மணியளவில் இறால் மீன்பிடி குளம் அருகே இரு வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
கோத்தா திங்கியிலிருந்து சுங்கை ரெங்கிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு லாரியைத் தவிர்க்க முயற்சிக்கும் போது சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்ததால் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)