விளையாட்டு

அல் நசாருடன் இணைந்து புதிய அடைவுநிலையப் பதிவு செய்த கிரிஸ்தியானா ரோனால்டோ

23/01/2025 06:25 PM

தம்மாம், 23 ஜனவரி (பெர்னாமா) -- சவூதி லீக் கிண்ணம்...

நேற்று முன் தினம், நடைபெற்ற ஆட்டத்தில், அல்-கலீஜ் கிளப்பை 3-0 என்ற கோல்களில் தோற்கடித்து, அல்-நசார் வெற்றிப் பெற்றது.

அதில் இரண்டு கோல்களை அடித்த கிரிஸ்தியானா ரோனால்டோ, அல் நசாருடன் புதிய அடைவுநிலையப் பதிவு செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ரோனால்டோவின் அணி சவூதி லீக்கில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

32 புள்ளிகளுடன் இருக்கும் அவ்வணி AFC வெற்றியாளர் லீக்கில் இடம்பெற சிறந்த நிலையில் உள்ளது.

இருப்பினும், 43 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கும் அல்-ஹிலால் அணியுடன் ஒப்பிடுகையில் அல்-நசார் அதிக வித்தியாசத்திலேயே உள்ளது.

தமது 918ஆவது மற்றும் 919ஆவது கோல்களை அடித்துள்ள ரோனால்டோ இப்பருவத்திற்கான லீக் கிண்ணத்தில் 13 கோல்களை அடித்துள்ளார்.

39 வயதுடைய அவர், அந்த சவூதி அரேபிய அணிக்கு விளையாடிய 92 ஆட்டங்களில் 101 கோல்களை அடித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)