மெல்பர்ன், 23 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி
வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், சிமோன் பொல்லெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மூன்றாம் நிலை விளையாட்டாளர்களான சிமோன் பொல்லெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி 2-6, 6-3 மற்றும் 6-4 என்ற புள்ளி கணக்கில் அரையிறுதி சுற்றில் வெற்றியைப் பதிவுச் செய்தனர்.
அவர்கள், இறுதிச் சுற்றில் நான்காம் நிலை விளையாட்டார்களான கெவின் கிராவிட்ஸ் மற்றும் டிம் பியூட்ஸ் அல்லது ஹாரி ஹெலியோவாரா மற்றும் ஹென்றி பாட்டன் ஜோடியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் பொல்லெல்லி மற்றும் வவாசோரி ஜோடி இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)