மகாராஷ்டிரா, 25 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்தாரா எனும் மாவட்டத்தில், மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் எண்மர் உயிரிழந்தனர்.
நேற்று காலை மணி 10.30 அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தினால் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி எண்மர் உயிரிழந்ததாகவும் எழுவர் காயமடைந்ததாகவும் போலீஸ் கூறியது.
கடுமையான காயங்களுக்கு ஆளாகிய எழுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தொழிற்சாலையின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், 14 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை ஐவர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)