கோலாலம்பூர், 25 ஜூன் (பெர்னாமா) -- எந்தவொரு தரப்பும் விடுபடாமல், நியாயமான முறையில் வளப்பத்தை பகிர்ந்து கொள்ள முக்கியத்துவம் வழங்கி, மலேசியா மற்றும் ஆசியானின் உயர்வுக்கு நிலைத்தன்மையை அடிப்படையாக கொள்ள வேண்டும்.
வெளி நெருக்கடிகளில் எந்தவொருக்கும் சாதகமாகவோ அல்லது சார்ந்தோ இல்லாமல், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுடன் பொதுவான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் ஆசியான் மையக் கொள்கைக்கு ஏற்ப மலேசிய தலைமைத்துவத்தின் கீழ், ஆசியான் கூட்டமைப்பு வலுவாக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் மலேசிய பேராளர் குழுவின் பயணம் நிறைவடைந்து விட்டதாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
ஆசியானின் நெருங்கிய உறவை வட்டாரத்திற்கான பலமாக மேம்படுத்தவும் இப்பயணம் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதோடு, இருவழி உறவை வலுப்படுத்தவும், முதலீடுகளைக் கவரவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் அப்பயணம் வழிவகுத்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)