புது டில்லி, 20 ஜனவரி (பெர்னாமா) -- இந்திய பொது பூப்பந்து போட்டியின் கலப்பு இரட்டையர் வெற்றியாளர் பட்டத்தை மலேசியாவின் கோ சீ ஃபெய் - நூர் இசுடீன் ரம்சானி ஜோடி கைப்பற்றியது.
அரையிறுதியில், உபசரணை நாட்டினரைத் தோற்கடித்த மலேசிய ஜோடி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் முன்னணி ஆட்டக்காரர்களை வீழ்த்தியது.
மலேசிய பொது பூப்பந்து போட்டியில் கடந்த வாரம் தோல்வி அடைந்த கோ சீ ஃபெய் - நூர் இசுடீன் ரம்சானி ஜோடி இந்த இறுதி ஆட்டத்தில் சாதனைப் படைத்துள்ளனர்.
இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் அவர்கள் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் வோன் ஹோ-சியோ சியுங் ஜே இணையரை கடும் போராட்டத்திற்குப் பின்னர் தோற்கடித்தனர்.
21-15 என்று முதல் செட்டை வென்ற மலேசிய இணை இரண்டாம் செட்டில் 21-13 என்று தோல்வி கண்டது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோ சீ ஃபெய் - நூர் இசுடீன் ரம்சானி இணை, 21-16 என்ற புள்ளிகளில் சூப்பர் 750 தகுதி கொண்ட இப்போட்டியின் பட்டத்தை வென்றனர்.
இதன் வழி அவர்கள் 3 லட்சத்து 16 ஆயிரத்து 631 ரிங்கிட்டைப் பரிசாக வென்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)