மெல்பர்ன், 27 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதை அடுத்து யென்னிக் சின்னரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள சின்னரின் வழக்கு அடுத்த வாரம் விளையாட்டுத்துறைக்கான உயர் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படவுள்ளது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்
கடந்த ஆண்டில் மார்ச் மாதம் Clostebol Steroid வகை ஊக்க மருந்தை சின்னர் இரண்டு முறை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது.
ஆயினும் சுயேட்சை விசாரணைக் குழு அவரை அந்த குற்றத்தில் இருந்து விடுவித்தது.
உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அவர், நேற்று நடந்த ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் , கடும் சவாலுக்குப் பின்னர் 6-3, 7-6 மற்றும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சண்டர் ஸ்வேரவைத் தோற்கடித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)