விளையாட்டு

தங்கப் பதக்கத்தை வெல்வதில் சவால் - டான் சியொங் மின்

29/01/2025 07:43 PM

புக்கிட் ஜாலில், 29 ஜனவரி (பெர்னாமா) --   இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தங்கப் பதக்கத்தை வெல்வதில் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்று தேசிய வுஷு வீராங்கனை டான் சியொங் மின் ஒப்புக்கொண்டார்.

ஒரு தங்கப் பதக்கம் வெல்வதற்கு மூன்று போட்டிகளை ஏற்பாட்டாளர்கள் இணைக்கவுள்ளதால், தேசிய விளையாட்டாளர்களுக்கு இது கடினமாக அமையும் என்று அவர் விவரித்தார்.

நான்குவான், நன்டோ மற்றும் நங்குன் ஆகிய பிரிவுகளை இணைத்து, அதில் அதிகப் புள்ளிகளை வெல்லும் விளையாட்டாளர்களே தங்கப் பதக்கம் வெல்வர் என்று டான் சியொங் மின் விளக்கினார்.

இந்த மூன்று போட்டிகளும் எனக்கு வழக்கமாக இருக்கும். ஆனால் நான் நான்குவான் மற்றும் நந்தாவோ பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் இந்த இரண்டு பிரிவுகளும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் உள்ளன. எனவே, நான் இந்த இரண்டு பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்துவேன். இப்போது இப்போட்டியில் எங்களுக்கு சிரமங்கள் இருப்பதால் நங்குன் பிரிவுக்கும் முயற்சி செய்வேன். இந்த ஆண்டு சில மாற்றங்கள் உள்ளன. எனவே, நான் மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்த வேண்டும்'', என்று அவர் கூறினார்.

2023-ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அவர் சாதனை படைத்தார்.

இவ்வாண்டு சீனா, ஜிலினில் நடைபெறவிருக்கும் ஆசிய கிண்ணம் மற்றும் சீனா, செங்டுவில் நடைபெறவிருக்கும் உலக வெற்றியாளர் ஆகிய போட்டிகளிலும் சியொங் மின் கலந்து கொள்ளவிருக்கிறார்.

வுஷு போட்டிகள் ஆண்டு மத்தியில் ஏற்பாடு செய்யப்படும் என்பதால், இவ்வாண்டு சீனப் புத்தாண்டை தமது குடும்பத்தினருடன் கொண்டாட வாய்ப்பு கிட்டியதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)