தென் சுடான், 30 ஜனவரி (பெர்னாமா) -- தென் சுடானில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் 20 பேர் மாண்டனர்.
விபத்துக்குள்ளான அந்த இலகு ரக விமானத்தில் மொத்தம் 21 பேர் பயணித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
எண்ணெய் வயல் தொழிளாலர்கள் பயணித்த அவ்விமானம் Unity மாநிலத்தின் தலைநகர் கியுபா நோக்கி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்விமானத்தில் சீனாவை சேர்ந்த இருவரும், இந்தியர் ஒருவரும் பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)