காஹெரா, 04 பிப்ரவரி (பெர்னாமா) -- திங்கட்கிழமை காசா பகுதிக்குள் ரஃபா மற்றும் கெரெம் ஷாலோம் வழியாக மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மொத்தம் 340 டிரக் லாரிகள் நுழைந்தன.
இதில் எரிபொருளை ஏற்றிச் செல்லும் 25 டிரக் லாரிகளும், எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ஐந்து டிரக்குகளும் இதில் அடங்கும் என்று சவூதி செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது.
அண்மையில் காசாவிற்குள் நுழைந்த மொத்த உதவி டிரக் லாரிகளின் எண்ணிக்கை 2,810-ஐ எட்டியது.
அதில் 2,626 டிரக் லாரிகள் பல்வேறு பொருட்களை கொண்டுச் சென்றன.
அதே நேரத்தில் டிரக் லாரிகள் எரிபொருள் மற்றும் எரிவாயுவை எடுத்துச் சென்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)