ஓரெப்ரோ, 05 பிப்ரவரி (பெர்னாமா) -- சுவீடன், ஓரெப்ரோ எனும் நகரில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரும் அடங்குவார் என்று போலீஸ் கூறியது.
இருப்பினும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை போலீஸ் வெளியிடவில்லை.
பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று போலீஸ் நம்புகின்றது.
குற்றம் நிகழ்ந்த இடத்தில் புலனாய்வாளர்களால் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளி தனியாகச் செயல்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இத்தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவீடனில் உள்ள பள்ளிகளில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் குறைவு என்றாலும், அண்மைய ஆண்டுகளில் கத்திகள், கோடாரிகள் போன்ற ஆயுதங்களால் மக்களைக் காயப்படுத்தும் அல்லது கொலை செய்யும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)