பொது

OP SKY; வாக்குமூலங்கள் பதிவு செய்ய 18 நபர்கள் அடையாளம் 

09/02/2025 05:47 PM

கோலாலம்பூர், 09 பிப்ரவரி (பெர்னாமா) - Op Sky விசாரணைக்கு உதவுவதற்காக விளக்கத்தைப் பதிவு செய்ய 18 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் அடையாளம் கண்டுள்ளது.

இதன் தொடர்பில், இதுவரை 39 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு விட்டதாக, எஸ்பிஆர்எம்-இன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

அடையாளம் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் கடன் தொடர்பான ஆவணங்களைப் பெற, எஸ்பிஆர்எம் சில வங்கிகளுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி ஆலோசனை நிறுவனங்களிடையே ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொது சேவை துறை ஊழியர்களுக்கு 70 கோடி ரிங்கிட் தொகையிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ எஸ்பிஆர்எம் முன்னதாக 4000 ஆவணங்களைக் கைப்பற்றியது.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள 12 பேர் கைது செய்யப்பட்டதோடு, நிதி ஆலோசனை மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய ஊழலையும் கள்ளப்பண பரிமாற்ற நடவடிக்கையையும் தடுப்பதில் எஸ்பிஆர்எம் வெற்றிக் கண்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை 27 பேர் தடுத்து வைக்கப்பட்டு, SPRM உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)