மணிப்பூர், 10 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியா, மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் தொடர்பு இருப்பதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் நேற்று பதவி விலகினார்.
சட்டமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி, ப.ஜ.க உறுப்பினருமான அவர் பதவி விலகியிருக்கிறார்.
சட்டமன்றக் கூட்டத்தில் பைரன் சிங்க்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்கத் திட்டமிட்டிருந்தது.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பைரன் பதவியில் நீடிப்பார் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி மெய்டீஸ் சமூகத்துக்கும், குக்கி பழங்குடியினத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது இனக்கலவரமாக மாறியது.
இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)