விளையாட்டு

டாலாஸ் கிண்ணத்தைத் தட்டிச் சென்ற ஷபோவலோவ்

10/02/2025 07:52 PM

டாலாஸ், 10 பிப்ரவரி (பெர்னாமா) -- டாலாஸ் பொது டென்னிஸ் போட்டியில் வெற்று பெற்று கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் கிண்ணத்தைத் தட்டிச் சென்றார்.

இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் ஐந்தாம் நிலை விளையாட்டாளரான காஸ்பர் ரூட்டுடன், ஷபோவலோவ் விளையாடினார்.

இவ்வாட்டத்தை 7-6 6-3 என்ற புள்ளிகளில் எளிதாகக் கைப்பற்றி, ஷபோவலோவ் கிண்ணத்தை வென்றார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை விளையாட்டாளரான தோமி பாலையும், இரண்டாம் ஆட்டத்தில் உலகின் நான்காம் நிலை விளையாட்டாளரான டெய்லர் ஃபிரிட்ஸ்சையும் தோற்கடித்து ஷபோவலோவ் சிறந்த ஆட்டத்தைப் பதிவு செய்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)