விளையாட்டு

அர்ஜென்டினா பொது டென்னிஸ் போட்டி: அலெக்சண்டர் ஸ்வெரெவ் தோல்வி

15/02/2025 05:51 PM

பியூனஸ் அயர்ஸ், 15 பிப்ரவரி (பெர்னாமா) --  தொடர்வது அர்ஜென்டினா பொது டென்னிஸ் போட்டி குறித்த செய்தி.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உபசரனை நாட்டின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான அலெக்சண்டர் ஸ்வெரெவ் தோல்வி கண்டார்.

முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களிலும் ஸ்வெரெவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செருண்டோலோ, மீதமுள்ள இரண்டு செட்களிலும் 6-3, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தேர்வாகினர்.

மற்றோர் ஆட்டத்தில், பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோவோ பொன்சேகா தமது முதல் ATP பட்டத்தை வெல்வதற்கான இலக்கில் முன்னேறியுள்ளார்.

அர்ஜென்டினாவின் மரியானோ நவோனுடன் நடைபெற்ற ஆட்டத்தில், 3-6, 6-4, 7-5 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று பொன்சேகா அரையிறுதிக்கான நுழைவுச் சீட்டை பெற்றார்.

இவர்களின் ஆட்டம் இரண்டு மணி நேரம் 53 நிமிடங்கள் வரை நீடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)