விளையாட்டு

ஊக்க மருந்து பயன்படுத்தியதால் சின்னருக்கு 3 மாத தடை

16/02/2025 08:04 PM

கோலாலம்பூர், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதால், உலகின் முதல் நிலை டென்னிஸ் விளையாட்டாளர் யானிக் சின்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூன்று மாதங்களுக்கு அவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், க்ளோஸ்டெபோல் எனும் ஊக்க மருந்தை அவர் உட்கொண்டதாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சின்னருக்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் இது குறித்து தமக்கு தெரியாது என்றும்,  உதவியாளர்கள் சிகிச்சை அளித்தபோது தவறுதலாக அந்த மருந்து ரத்தத்தில் கலந்திருக்கக் கூடும் என்றும் சின்னர் கூறியிருந்தார்.

இத்தடை பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி மே 4-ஆம் தேதி அமலில் இருந்தது.

இத்தடை நிறைவு பெற்ற பின்னர், மே 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரான்ஸ் பொது டென்னிஸ் போட்டியில் அவர் கலந்து கொள்வார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)