அரசியல்

அரச தந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை  ஏற்படுத்தும் பிரதமரின் பஹ்ரைன் பயணம்

18/02/2025 05:41 PM

கோலாலம்பூர், 18 பிப்ரவரி (பெர்னாமா) - இன்று இரவுபஹ்ரைனுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  மேற்கொள்ளவிருக்கும் அதிகாரப்பூர்வ பயணம்  கடந்த 50 ஆண்டுகளை எட்டிய மலேசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை  தொடங்கவிருக்கின்றது. 

அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சல்மான் ஹமாட் அல் கலிஃப்பா விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் முதன் முறையாக அங்கு பயணிக்கவுள்ளதாக பஹ்ரைனுக்கான மலேசியத் தூதர் ஷஸ்ரில் ஸாஹிரான் கூறினார். 

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராமின் முதல் பஹ்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது என்றும் பஹ்ரைன், மனமாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஷஸ்ரில் ஸாஹிரான் தெரிவித்தார். 

ஆசியான் தலைவர் பதவியில் மலேசியா கவனம் செலுத்துவதுடன் வட்டார மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் அதன் நிலைப்பாடு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கான அலுவல் பயணங்களை முடிப்பதற்கும் இந்த வருகை பிரதமருக்கு சிறந்த தளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 

இந்த பயணத்தில் மலேசியா-பஹ்ரைன் உறவுகளின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிக்க, பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக அன்வார்  வருகை புரிவதாக ஷாஸ்ரில் குறிப்பிட்டார். 

அதோடு, வர்த்தகம், முதலீடு, உணவுப் பாதுகாப்பு, இஸ்லாமிய வங்கி, ஹலால் தொழில், இணைப்பு மற்றும் சுற்றுலா போன்றவற்றில் வட்டார  மற்றும் உலகளாவிய  பிரச்சனைகள் குறித்தும் இதில் கலந்தாலோசிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)