கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- பெர்னாமா தொலைகாட்சியின் 17-ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.
பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் மற்றும் பெர்னாமா தொலைக்காட்சி தலைவர் நோர் ஹம்சீலா முஹமாட் ஹம்பாலி ஆகியோர் கலந்துகொண்ட வேளையில், அதன் ஊழியர்கள் 300 பேர் இன்று நடைபெற்ற விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.
நோர் ஹம்சீலா முஹமாட் ஹம்பாலி உரையுடன் நிகழ்வைத் தொடக்கி வைத்த நிலையில், பெர்னாமா
தொலைகாட்சியின் 17 ஆண்டுகால செயல்பாட்டின் சாதனைகளை அருள் ராஜூ துரை ராஜ் பாராட்டி உரையாற்றினார்.
17-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கேக் வெட்டப்பட்டது.
இந்த இனிமையான நிகழ்வுக்குப் பெர்னாமா தொலைகாட்சியின் ஒவ்வொரு பிரிவும் உணவுகள் வழங்கி தங்களின் ஒத்துழைப்பை நல்கின.
1998-ஆம் ஆண்டு நான்கு பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட பெர்னாமா தொலைக்காட்சி, 2008-ஆம் ஆண்டில் முழு நேர செய்தி அலைவரிசையாக மாற்றம் கண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)