பொது

அனைத்து தளங்களிலும் GUMMY மிட்டாய்  விற்பனைக்குத் தடை 

23/02/2025 06:45 PM

லங்காவி, 23 பிப்ரவரி (பெர்னாமா) - GUMMY எனும் ஒருவித கண் வடிவிலான ஜவ்வு மிட்டாயை அனைத்து தளங்களில் இருந்தும் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. 

உள்நாட்டு சந்தைகளிலும் இணைய வர்த்தக தளங்களிலும் அந்த மிட்டாய் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

இந்த GUMMY மிட்டாயை உண்கொண்டதினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, பினாங்கில் 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, கெடா லங்காவியில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)