உலகம்

பிலிப்பைன்ஸ்; கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

03/03/2025 07:01 PM

மணிலா, 03 மார்ச் (பெர்னாமா) --    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வெப்பத்தின் அளவு ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக பிலிப்பைன்ஸ் தேசிய வானிலை ஆலோசனை அமைப்பு, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நீண்ட நேரம் வெளியில் நடுமாடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பிலிப்பைன்ஸ் தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் தாக்கியுள்ளது. 

அதன் விளைவாக, பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், கோடி கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மணிலாவில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)