ஈப்போ, 28 பிப்ரவரி (பெர்னாமா) - ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானது குறித்த அறிவிக்கையை பேராக் சட்டமன்ற தலைவர் டத்தோ முஹமட் சாஹிர் அப்துல் காலிட், தேர்தல் ஆணையம், SPR-இடம் சமர்பித்துள்ளார்.
இன்று காலை சுமார் மணி 10.15 அளவில் பேராக் டாருல் ரிட்சுவான் கட்டிடத்தில், பேராக் தேர்தல் ஆணைய இயக்குநர் முஹமட் நஸ்ரி இஸ்மாயிலிடம் இந்த அறிவிக்கை ஒப்படைக்கப்பட்டது.
"பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்திலிருந்து, அயெர் குனிங் தொகுதி காலியானது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வழங்குவதே இந்த சந்திப்பின் நோக்கம்," என்றார் அவர்.
இஷாம் ஷாருடின்காலமானதை தொடர்ந்து, அவரின் தொகுதி காலியானதாக பேராக் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட் அறிவித்ததை முஹமட் சாஹிர் குறிப்பிட்டார்.
தற்போது, பேராக் மாநில சட்டமன்றக் கூட்டம் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நடைபெறலாம் என்பதால் தேர்தல் ஆணையம் அதை கவனத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, பினாங்கு ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் கலந்து கொண்ட 59 வயது இஷாம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)