விளையாட்டு

FA கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதியில் அஸ்டன் வில்லா

01/03/2025 05:52 PM

லண்டன், 01 மார்ச் (பெர்னாமா) --    FA கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக அஸ்டன் வில்லா முன்னேறியுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அது 2-0 எனும் கோல்களில் கார்டிஃப் சிட்டியைத் தோற்கடித்துள்ளது.

இந்த ஐந்தாம் சுற்று ஆட்டத்தின் முதல் பாதிவரை கோல் அடிப்பதில் இரு அணிகளும் சிரமத்தை எதிர்நோக்கின.

பின்னர், இரண்டாம் பாதியை அஸ்டன் வில்லா ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அதன் பலனாக 68-வது நிமிடத்தில் முதல் கோல் போடப்பட்ட வேளையில், இரண்டாவது கோல் 80-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

அவ்விரு கோல்களையும் அஸ்டன் வில்லா தாக்குதல் ஆட்டக்காரர் மார்கோ அசென்சியோ அடித்து தமது அணியைக் காலிறுத்க்குக் கொண்டு சென்றார்.

கடைசியாக, 2014-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த FA கிண்ண காற்பந்து போட்டியின்போது அஸ்டன் வில்லா காலிறுதிக்கு முன்னேறும் வாய்பைப் பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)