பெல்ஃபாஸ்ட், 02 மார்ச் (பெர்னாமா) -- காற்பந்து போட்டிகளில், கோல் காவலர்கள் நேரத்தை விரயம் செய்வதை தடுப்பதற்காக, அனைத்துலக காற்பந்து சங்க வாரியம், I-F-A-B கூட்டத்தில், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து, Belfast-டில் நடந்த அதன் 139-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் FREE KICK விதிகளில் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஆறு விநாடிகளுக்குள் பந்தை கோல் காவலர்கள் தமது ஆட்டக்காரர்களிடம் ஒப்படைக்காமல் போனால், FREE KICK கொடுப்பதற்கு விதிமுறை இருந்தது.
தற்போது எட்டு விநாடிகளுக்கு மேல், பந்தை கோல் காவலர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், எதிர் தரப்பு அணிக்கு இலவசமாக CORNER KICK வழங்கப்படும் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், VAR எனும் வீடியோ தொழிநுட்ப துணை நடுவர் நெறிமுறையிலும் ஒரு புதிய விதி, அக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சில சூழ்நிலைகளில் நடுவர்களை அணுகுவதற்கு அணியின் கேப்டன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை வலுப்படுத்தும் புதிய வழிகாட்டுதல்களையும் இக்குழு முன்னிலைப்படுத்தி உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)