கோலாலம்பூர், 02 மார்ச் (பெர்னாமா) --பள்ளி காலங்களில், ஒரு மணி நேரத்துக்கு மூன்று முதல் ஐந்துரிங்கிட் வரை சோளக் கதிர்களை விற்பனை செய்து குடும்பச் சுமையைக் குறைத்த பிரதீப் சிங் இன்று ஊடகம் மட்டுமின்றி F&B எனும் உணவு மற்றும் பானங்கள் துறையிலும் வெற்றிகரமான தொழில்முனைவோராக முன்னேறி உள்ளார்.
கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தமது படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் அன்று அவருக்கு ஏற்பட்டது.
அந்த வறுமையில் இருந்து தொடங்கிய பிரதீப் சிங்கின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இன்று அவரை வெற்றியாளராக உருவாக்கியுள்ளது.
ஜோகூர் செகாமட்டிலிருந்து, தமது 11-வயதில் கோலாம்பூர் வந்து சேர்ந்த பிரீதீப் குடும்பம், பின்னர் சற்று முன்னேற்றம் கண்டது.
பள்ளி விடுமுறை நாட்களில் பணிபுரிவது, தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து, கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது என்று தமது வாழ்வை தாம் படிப்படியாக மாற்றி முன்னேற்றம் கண்டதாக அவர் கூறினார்.
''எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இரண்டு விரிவுரையாளர்கள் வந்து அவர்கள் என் பெயரைப் அழைத்து, என்னை வெளியேற்ற வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, நீ உன் கடனைச் செலுத்தவில்லை என்பது உனக்குத் தெரியும். நாங்கள் வகுப்பில் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தனர். என்னால் வகுப்பில் இணைய முடியவில்லை? சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாமா? (என்று கேட்டேன்) இனிமே நீங்கள் தொடர முடியாது என்று அவர்கள் கூறினர். நான் ஏன் கிளம்ப வேண்டும். வகுப்பறையில் பாதி (பாடத்தில்) வேளியேற வேண்டும் என்று விதிமுறை உள்ளதா?'' பிரதீப் சிங் தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பகுதி நேர வேலைகளைச் செய்து வேலை செய்து வந்த அவர், கல்வித் தகுதி இல்லாததால் சுயதொழிலை உருவாக்கினார்.
ஊடகத்தின் தொழிநுட்ப பகுதியில் நிபுணத்துவம் பெற்று, பின்னர் F&B துறையில் நுழைந்து அதிலும் வெற்றி பெற்றார்.
வாய்ப்புகளைத் தேடி அதிக நேரத்தை வீணடிக்காமல், அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதை பிரதீப் சிங் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)