உலகம்

ரஷ்யாவின் நெருக்குதலுக்கு உக்ரேன் அடிபனியாது

03/03/2025 02:28 PM

லண்டன், 03 மார்ச் (பெர்னாமா) --   ரஷ்யாவின் நெருக்குதலுக்கு உக்ரேன் அடிபனியாது என்று ஜெர்மனி பிரதமர் ஓலோஃப் ஷோல்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவுடனான போர் நிறைவுற்றாலும், கீவ் வலுவான இராணுவத்தைக் கொண்டிருப்பதை நட்பு நாடுகள் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

''உக்ரேன் பொருளாதாரத்தின் அளவைப் பார்த்தால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும், பிற நாடுகளிலும் உள்ளவர்கள் ஒரு வலுவான இராணுவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.அமைதிக் காலத்திலும் கூட உக்ரேன் வலுவாக இருப்பதை இது உறுதி செய்யும். ஏனெனில் நாடு (உக்ரேன்) இப்போது உள்ள ஒரு சூழ்நிலையில் (வலுவான) இல்லை'', என்றார் அவர்.

இதன் வழி, எதிர்காலத்தில் நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உக்ரேன் தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஓலோஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)