விளையாட்டு

ஐ.சி.சி கிரிக்கெட் இறுதியாட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது நியூசிலாந்து

06/03/2025 08:14 PM

லாகூர், 06 மார்ச் (பெர்னாமா) -- ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டி. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த, வெற்றியின் வழி, வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து களமிறங்கவுள்ளது.

லாகூரின் கடாஃபி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

ரச்சின் ரவிந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் வழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்த ஜோடி தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் பந்துவீச்சை மிக லாவகாமாக எதிர்கொண்டு சிக்ஸர் அடித்து அரங்கை அதிரச் செய்தது.

ரவிந்திரா 101 பந்துகளில் 108 ரன்கள் அடித்த வேளையில், கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்து, தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்ய ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு அது 362 ரன்களை குவித்தது.

அதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]