உலகம்

அமெரிக்காவில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை சரிவு

07/03/2025 03:05 PM

நியூயார்க், 07 மார்ச் (பெர்னாமா) -- மகரந்தச் சேர்க்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் சரிவு கண்டுள்ளது.

கடந்த நூற்றாண்டில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் மேலாக பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியிருக்கிறது.

அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்களை உள்ளடக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

554 பட்டாம்பூச்சி இனங்களை உட்படுத்தி சுமார் 76,000 பட்டாம்பூச்சி கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

2000-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் வழி அமெரிக்காவின் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை 22 விழுக்காடு குறைந்துள்ளது கண்டறிப்பட்டது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை சரிவு கண்டிருப்பதாக அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

10 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வசித்து வரும் பட்டாம்பூச்சிகளின் வீழ்ச்சியினால் உலகளாவிய பல்லுயிர் பாதிக்கப்பட்டிருக்கிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]