கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக, ஏரா எஃப்.எம் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்புடைய காணொளி குறித்த விசாரணை அறிக்கையை அரச மலேசிய போலீஸ் படை இன்று தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைத்தது.
இதன் தொடர்பில், போலீசாருக்கு இதுவரை 73 புகார்கள் கிடைத்துள்ளதோடு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 298, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இதுவரை இவர்களைத் தவிர்த்து யாரும் விளக்கமளிக்க அழைக்கப்படவில்லை என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
நேற்று, அந்த வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறுவர் விளக்கமளிக்க புக்கிட் அமானிற்கு வருகை புரிந்தனர்.
இதன் தொடர்பில், புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணையை மேற்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காணொளி 95,400 முறை பார்க்கப்பட்டுள்ளதோடு, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் 204 பேர் பகிர்ந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)